ஆசையாய் தொடர்கிறேன்

 

ஆசையாய் தொடர்கின்றேன்

இயேசுவை நோக்கியே

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

இலக்கை நோக்கி நானும் ஓடுகிறேன்;

 

பின்னிட்டு பாராதே நீ

பின்வாங்கி போகாதே

லோத்தின் மனைவியை நினைத்து நீயும்;

இயேசுவை நோக்கி ஓடிடு

 

உலகத்தை பாராதே

அதன் கவர்ச்சியால் மயங்காதே

காண்பவை எல்லாம் மாயை மாயை

இயேசு ஒருவரே நிரந்தரம்

 

மனுஷனை நம்பாதே

அவன் வேஷத்தை பாராதே

பனியை போல மாய்ந்திடுவான்

இயேசு ஓருவரே நம்பிக்கை